மக்களை ஏமாற்றும் செல்பேசி நிறுவனங்கள் -----நிறுவனங்களை ஏமாற்றும் மக்கள்  

Posted by iskcon


இப்போதெல்லாம் மிகவும் பிரபலம் ஆகிவிட்ட கைபேசி நிறுவனங்கள் தங்களின் வியாபாரத்தை அதிகரிக்க சிம் கார்டு இலவசம் மற்றும் சிம் கார்டு பாத்து ரூபாவிற்கு வாங்கினால் முப்பது ரூபாய் அல்லது நாற்பது ரூபாய் பேசும் நேரம் உண்டு என்று விளம்பரபடுத்துகிறார்கள். சமீபத்தில் நான் சந்தித்த நண்பர் ஒருவர் சொன்ன தகவல் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் வீட்டில் நிரந்தரமாக ஒரு செல்பேசி எண் வைத்திருக்கிறார். இப்படி கவர்ச்சியான விளம்பரத்திற்காக அளிக்கப்படும் சிம் கார்டுகளை வாங்கி அதில் இருக்கும் பேசும் நேரத்தை மட்டும் உபயோகபடுத்திவிட்டு அதை தூக்கி எறிந்து விடுவாராம். இதை மற்றொரு நண்பரிடம் பகிர்ந்து கொண்டபோது அவர் சொன்ன தகவல் சிரிப்பை வரவழைத்தது. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இப்போதெல்லாம் குறைந்த விலையில் நிறைய கிடைப்பதால் அதை எடுத்துக்கொண்டு இப்படி மலிவுவிலை சிம் கார்டுகளை ஒருவர் நாற்பது கார்டுகள் வரை வைத்திருப்பதாக சொன்னபோது இதை நினைத்து சிரிப்பு வராமல் என்ன சொல்வது. என்ன கொடுமை சரவணன் இது?

சந்தன மரக்காடும் கரி வியாபாரியும்  

Posted by iskcon



நகர்வலம் வந்த மகாராஜா அங்கே ஒரு ஏழையை கண்டான். அவனின் வறுமையை கண்டு மனமிரங்கி அவனை ஒரு மலையுச்சிக்கு அழைத்து சென்று " கண்ணுக்கெட்டிய தூரம் வரை உள்ள காடு முழுவதும் உனக்கே சொந்தம்" என்று சொன்னார்.
நாட்கள் கடந்தன. மீண்டும் ஒரு முறை நகர்வலம் வந்த மன்னன் அந்த ஏழை பழைய நிலையிலே இருப்பதை பார்த்து அவனிடம் சென்று தான் தானமாக கொடுத்த காட்டை பற்றி கேட்டான். அவன் சொன்ன பதிலை கேட்ட மன்னன் மூர்ச்சையாகி போனான்.

ஏழை: " அரசே நீங்கள் எனக்களித்த மரங்களை எரித்து கரியாக்கி விற்று விட்டேன் "

ஆம் அவன் ஒரு கரி வியாபாரி. ராஜ கொடுத்ததோ சந்தனக்காடு.

இப்படிதான் இந்த நாட்களில் பலரும் தங்களின் கைகளில் கிடைத்த சந்தானம் போன்ற நல்ல உள்ளங்களை எரித்து கரியாக்கி தங்களின் சுயலாபங்களை தீர்த்து கொள்கின்றனர்.