நேற்று இடம் பெற்ற செல்லமே தொடரில் தாயம்மா(சுபாஷினி) அண்ணனை பார்த்து கேட்கும் காட்சியில் "மலட்டு சிறுக்கி" என்று பிள்ளை இல்லாத செல்லம்மாவை பற்றி சொல்லி கத்தும் நிகழ்ச்சியை பார்த்து ஒரு கணம் ஆடிபோனேன். ஒரு பெண் தயாரிக்கும் தொடரில் ஒரு பெண் இப்படி அநாகரிகமாக பேசுகிறார். ப்ரைம் டைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடரை எதனை பிள்ளை இல்லாத பெண்கள் பார்க்கிறார்கள். அவர்களின் மனங்களை ஈட்டி கொண்டு குத்தினார் இன்று சுபாஷினி.
பெண்களால் வளர்க்கபடுகிறது பெண்ணடிமைத்தனம்.
வாழ்க.
உலகின் மிக உயர்ந்த செல்வம் தாய் தான். சென்ற டிசம்பர் நான்காம் தேதி மறைந்த என் தாய் எனக்கு கிடைத்த மிக பெரிய செல்வம். நாற்பது வயதான என்னை இறுதி வரை ஒரு குழந்தை போல பாவித்த அந்த தாய் மறைந்த போது உலகமே இருட்டி போனது எனக்கு, மரணபடுக்கையில் என் தாய் என்னிடம் சொன்னது " நீ என்னை நல்ல பார்த்துகிட்ட " . என் செவிகளில் என்றும் ஒலிக்கும் இந்த ஒலி தான் எனக்கு கிடைத்த மிகபெரிய ஆறுதல்.
சொத்துக்கள்
Contributors
இந்த உலகமே ஏமாற்று உலகம் எவரையும் நம்பாதே
1
.jpg)
